கோவை மாநகரில் கடை வீதி, வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம், செல்வபுரம், குனியமுத்தூர், கரும்புக்கடை, சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி, காட்டூர், ரேஸ் கோர்ஸ், ரத்தினபுரி, சாய்பாபா காலனி மற்றும் கவுண்டம்பாளையம் என பல இடங்களில் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில் மாநகரில் மொத்தம் உள்ள 48 காவல் நிலையங்களில் 207 பணியிடங்கள் காலியாக உள்ளது RTI மூலம் சமூக ஆர்வலர் ரவிசங்கர் எழுப்பிய கேள்விக்கு பதிலாக வெளிவந்துள்ளது.
கோவை மாநகரில் 20 சட்ட ஒழுங்கு சம்மந்தமான காவல் நிலையங்கள், 20 விசாரணை பிரிவு, 8 போக்குவரத்து காவல் நிலையங்கள் என மொத்தம் 48 காவல் நிலையங்களாக உள்ளன. இவற்றில் காலியாக உள்ள 207 பணியிடங்களில் 137 பணிகள் சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களிலும், விசாரணை பிரிவிலும், 70 பணிகள் போக்குவரத்துக் காவல் நிலையங்களிலும் உள்ளதாக தெரியவருகிறது.