நொய்யல் ஆறுக்குள் கழிவு நீர் கலப்பதை தவிர்க்கும் நோக்கில் கோவை மாநகருக்குள் நொய்யல் செல்லும் இடங்களில் 4 பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு சுத்திகரிப்பு நிலையத்திலும் தினமும் 80 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யமுடியும். இதனால் நொய்யலுக்குள் வெளியே இருந்து வரக்கூடிய நீர் ஆற்றுக்குள் நுழையும்போது மாசில்லாதபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.30 கோடியில் இந்த திட்டத்தை முன்னெடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடம் இருந்தும் மாநகராட்சி பெற்றுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.