மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை மூலம் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை (Chief Minister Research Fellowship) 2024-2025 முதல் முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ/மாணவியர்களுக்கு ரூ.100000/- வீதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்; வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை ; இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழு நேர /பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.

ரூ.1 இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date ) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தவுடன் முழுவதுமாக வழங்கப்படும். 

ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை,தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல், முழு நேர/பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சி படிப்பிற்கான ஆய்வறிக்கை, வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date), வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிடச்சான்று (Nativity Certificate) முதலியவற்றை விண்ணப்பத்துடன் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி, தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.


News Script by Thirusounder