மத்திய பட்ஜெட் 2025: பருத்தி இறக்குமதி மீதான வரி ரத்தாகாதது வருத்தமளிக்கிறது - தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு
- by CC Web Desk
- Feb 01,2025
2025-26 பட்ஜெட்டில் வரவேற்க கூடிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் சிறு குறு நடத்தர தொழில் நிறுவனங்கள், குறிப்பாக ஜவுளி தொழில்துறை சார்ந்தோர் எதிர்பார்த்த பருத்தி இறக்குமதி வரி 11% ரத்து; சர்வதேச விலையை விட 15% முதல் 30 %அதிகம் உள்ள பாலீஷ்டர் மற்றும் விஸ்கோஸ் விலை உயர்வை கட்டுபடுத்த எந்த அறிவிப்பும் வராதது மற்றும் சிறு குறு நடத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி வட்டி விகிதத்தை குறைக்க அறிவிப்பு வராதது போன்றவை ஏமாற்றத்தை அளிக்கின்றது என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநிலபொது செயலாளர் ஜெயபால் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருட வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு; 7.7 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரிட்கார்ட் திட்டம்; ஏற்றுமதிக்கு என்று ஊக்குவிக்க வாரியம்; 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு போன்ற அறிவுப்புகள் மக்களுக்கு சாதகமானதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.