வரும் 11.02.2025 (செவ்வாய்), தை பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் வள்ளலார் தினம் என்பதால் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு, போத்தனூர் ஆடு/மாடு அறுவைமனைகளும் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் இரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் வள்ளலார் தினத்தன்று வழக்கமாக டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் பிப்.11ம் தேதி அரசு விடுமுறை; இறைச்சி கடைகள், மதுபான கடைகள் செயல்படாது
- by CC Web Desk
- Feb 08,2025