NIA கல்வி நிறுவனங்களின் சார்பாக சர்வதேச மகளிர் தினம் 2025 மற்றும் யுவசக்தி நல சங்க அமைப்பு விழாவானது டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் மற்றும் யுவசக்தி மகளிர் நலச் சங்கத்தின் தலைவர், பி. ஞானாம்பிகை, அவர்கள் ஆண்டு அறிக்கை வழங்கினார்.

யுவசக்தி விருது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் நாள் உலக மகளிர் தினம் NIA கல்வி நிறுவனங்களின் பெண்கள் அமைப்பான “யுவசக்தி நலச் சங்கம்” சார்பாக இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்வி, தொழில், விவசாயம், மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் திறமை மிக்க பெண்களை தேர்வு செய்து, இந்நாளில் அவர்களைப் பாராட்டி பெருமை செய்யும் வகையில் யுவசக்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இந்த விருது சமூக சேவையாற்றிவரும் கோயம்புத்தூர் ஸ்வர்கா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதாவுக்கும்  சென்னை ரானே மெட்ராஸ் லிமிடெட் (RML), ன் தலைமை நிர்வாக அதிகாரி, கெளரி கைலாசத்துக்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு, யுவசக்தி மன்றத்தின் நன்கொடை ரூ. 1.2 கோடியாக உள்ளது.  யுவசக்தி மகளிர் நலச் சங்கத்தின் மூலம் திரட்டப்பட்ட இந்த தொகையினைக் கொண்டு வருடந்தோறும் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் பொறியியல் கல்லூரியின் 4 மாணவியர்கள், பாலிடெக்னிக் கல்லூரியின் 4 மாணவியர்கள் மற்றும் என்.ஐ.ஏ. பள்ளிகளின் 12 மாணவியர்கள் என மொத்தம் 20 தகுதி வாய்ந்த மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

5 மாணவியருக்கு சிறந்த முதன்மையான மாணவர் விருது டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 1 இறுதியாண்டு மாணவிக்கும், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 1 இறுதியாண்டு மாணவிக்கும், NIA பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், என்.ஐ.ஏ கல்வி நிறுவனத்தின் தலைவர் ம.மாணிக்கம்; தாளாளர் மா.ஹரிஹரசுதன், செயலர் சி. இராமசாமி, இணைச் செயலாளர், எஸ்.வி.சுப்பிரமணியன், எம்.சி.இ.டி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் .ஏ.செந்தில்குமார், என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவியர்கள், கோவை கஸ்தூர்பா காந்தி காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.