பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெகனிக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது.
NIA கல்வி நிறுவனங்களின் செயலர் சி.இராமசாமி அனைவரையும் வரவேற்று தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர். எஸ். திருஞானசம்பந்தம் கலந்துகொண்டார். விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரூட்ஸ் இண்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் மனிதவள துறை இயக்குனர் கவிதாசன் 'அருட்செல்வர்' N. மஹாலிங்கம் அவர்கள் பின்பற்றிய வள்ளலாரின் கோட்பாடுகளை எடுத்துரைத்தார்.
கல்லூரியின் முதல்வர் எம்.அசோக் அனைத்து துறைத் தலைவர்களையும். முதலாம் ஆண்டு விரிவுரையாளர்களையும் அறிமுகப்படுத்தினார். விழாவில் புதிய மாணவர்களின் பெற்றோர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
நாச்சிமுத்து பாலிடெகனிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!
- by CC Web Desk
- Jun 19,2024