கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தின் நீர்மட்ட உயர்வின் காரணமாக செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து பெரிய குளத்திற்கு உபரி நீரின் மதகுகள் திறந்து வைக்கப்பட்டது. இந்த பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.