மாசடைந்த சிங்காநல்லூர் குளத்தில் நல்ல தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாத சூழல் நிலவுவதாக இயற்கை ஆர்வலர்கள்/செயல்பாட்டாளர்கள் பல வருடமாக வருத்தத்துடன் இருந்து வந்தனர்.

ஒருவேளை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மாற்று வழி மூலம் சிங்காநல்லூா் குளத்தில் நிரப்பினால் அந்த குளம் சுத்தமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் குளத்தில், ரூ 4.5 கோடி மதிப்பில் தினமும் 20 லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யக்கூடிய சுத்திகரிப்பு நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சிங்காநல்லுர் குளத்தில் உள்ள நீரின் தரம் இனி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.