தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என். சுரேஷ்ராஜன் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள கே.எம். மதுபாலா, எம். கணேசள், கே. கருணாநிதி, எஸ். பெரியாண்டவர்  இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். புது உறுப்பினர்கள் குழுவில் கோவையை சேர்ந்த பிரபல ஸ்ரீ அன்னபூர்ணா உணவக குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.