கோவைக்கு புது பொறுப்பு அமைச்சர் நியமனம்!
- by David
- Jul 06,2023
Coimbatore
கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (District Monitoring Officer) மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்குவார்.