கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 'மனிதன் கையில் சுழலும் உலக உருண்டை' சிலை ஒன்றும் ஜல்லிக்கட்டு காளையை வீரன் அடக்குவது போன்ற வெண்கல சிலையையும் நிறுவப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
இந்த சிலைகளின் துவக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி , மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தனர்.
சுழலும் உலக உருண்டையை ஏந்திய கைகளில் இருந்து தண்ணீர் சிந்துவது போல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.அதன் அருகே தண்ணீரை சேமியுங்கள் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீ வாழ நீர் வேண்டும் ... கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் கருத்துள்ள புது சிலை திறப்பு!
- by CC Web Desk
- Sep 05,2024