கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 5 டிஎன் மகளிர் பட்டாலியன் தேசிய மாணவர் படை (என்.சி.சி) சார்பில் வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
தலைமைப்பண்புகள், ஒழுக்கம் மற்றும் தேசிய கடமை உணர்வுகளை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.
இதில் மாணவிகள் அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல் மற்றும் வரைபட ஆய்வு என ஒரு குழுவாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுவர்.
ஜூலை 16 முதல் 25 வரை என 10 நாட்கள் நடைபெறுகின்ற இந்த முகாமில் கோவையிலுள்ள பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு பயிற்சியளிக்க 20 இராணுவ அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.