பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் கோவை ஜீவன் ஜோதி பயிற்சி மையத்தில் கோவையை அடுத்த,காரமடை குட் ஷெப்பர்ட் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் இருந்து 75க்கும் மேற்பட்ட தொண்டுநிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.இந்த பயிற்சி முகாமில் சென்னை சி.சி.ஆர். டி.முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே. கிருஷ்ணவேணி கலந்து கொண்டுஅனைவருக்கும் பயிற்சி அளித்தார்.