தமிழக அரசின் 'நான் முதல்வன்'  திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணியளவில் கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.