அண்மையில் கோவைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கோவை தொழில் கூட்டமைப்பான போசியா உறுப்பினர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜேம்ஸ் உடன் சந்தித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில்  மனு ஒன்றை வழங்கினர்.

அதில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்சார வாரியம் உயர்த்திய நிலை கட்டணத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. நிலை கட்டண உயர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றோம். 

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு தாங்கள் கோவை வந்தபோது "தேர்தல் நடந்து முடிந்த பின்னர் நிலை கட்டணம் சம்பந்தமாக பரிசீலனை செய்து தொழில் துறையினரின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும்" என உறுதி அளித்தீர்கள்.

எனவே கருணை உள்ளத்தோடு எங்களது கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டுகிறோம். மின் கட்டணத்தில் நிலை கட்டணத்தை முழுமையாக வாபஸ் பெற்று குறு, சிறு,  மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டுகிறோம். 

இவ்வாறு அந்த மனதில் தெரிவித்திருந்தனர்.