குறுந்தொழில் முனைவோர்கள் மீது மின் வாரியம் விதித்துவரும் அபராத நடவடிக்கையை நிறுத்த கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா (FOCIA - FEDERATION OF COIMBATORE INDUSTRIAL ASSOCIATIONS) சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், நடராஜன் மற்றும் ரவீந்திரன் இன்று கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் தலைமை மின் பொறியாளரிடம் இதுகுறித்த மனுவை வழங்கினார்.
அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
கோவை மாவட்ட மின்பகிரமானத்துக்கு உட்பட்ட பகுதியில் 18 கிலோ வாட்டுக்கு குறைவான மின்இணைப்பு பெற்று குறுந்தொழில் முனைவோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜாப் ஆர்டர்கள் பெற்று தாங்களும் இயந்திரங்களில் பணி செய்தும், தங்கள் சக்திக்கு உட்பட்டு குறைந்த பட்சம் 5 தொழிலாளிகள் வரை வேலை வழங்கி தொழில் நடத்தி வருகின்றனர்.
குறுந்தொழில் செய்யும் இந்த நிறுவனங்கள் மாதம் ரூ.1000 முதல் ரூ.20,000 வரைக்கான மின்சாரத்தை பயன்படுத்தி தங்கள் பயன்பாட்டுக்கான கட்டணத்தை செலுத்தி வந்தனர்.
மின்சார வாரியத்துக்கான மின்கணக்கீட்டாளர் கடந்த மாதம் மின்பயன்பாட்டுக்கான கட்டணத்தை கணக்கிடும் போது ரூ.2000 வரை மின்சாரத்தை பயன்படுத்திய குறுந்தொழில் நடத்தி வரும் தொழில் முனைவோர்களுக்கு அபராத தொகையாக (பவர் பேக்ட்) காரணம் காட்டி 150% சதம் வரை விதித்து உள்ளனர்.
பயன்படுத்திய மின்கட்டணம் ரூ.2000மாக இருக்கும் பட்சத்தில் ரூ.3000ரத்தை அபராதமாக விதித்தது அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி உள்ளது. உடனடியாக இந்த அபராத விதிப்பை நிறுத்துவதுடன் அபராதமாக வசூலித்த தொகையினை சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு திருப்பி கொடுத்து உதவிட வேண்டுகிறோம். மின்சார வாரியம் 18 கிலோவாட் கீழ் மின்இணைப்பு பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தி மின் சேதாரத்தை தவிப்பதற்கான வழிகாட்டி சேதாரத்தை தவிரக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நமது மண்டலத்துக்கு உட்பட்ட மின்பகிரமானத்தில் கிட்டதட்ட 50,000 யிரத்துக்கும் மேல் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்றவர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு கடந்த ஆண்டு 3 B யில் உள்ள மின்இணைப்புகள் 3A1 மின்இணைப்பாக மாற்றி கொடுக்க ஆணைபிறப்பித்தும் இன்று வரை நமது மண்டலத்தில் அமுல்படுத்தாமல் உள்ளது.
இந்த டாரிப்பில் ஒவ்வொருவராக மின் இணைப்பு தாங்களாக முன் வந்து மாற்றுவதில் பல நெருக்கடிகளும் சிக்கலும் உள்ளது. தங்களின் வாரியத்தின் மூலம் 12 கிலோவாட்டுக்கு கீழ் மின்இணைப்பு பெற்றவர்களுக்கு சாப்ட்வேரில் மாற்றம் செய்து உடனடியாக 3A1 மின் இணைப்புக்கு மாற்றி கொடுத்திட வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.
குறுந்தொழில் முனைவோர்கள் மீது மின் வாரியம் விதித்துவரும் அபராத நடவடிக்கையை நிறுத்த FOCIA சார்பில் கோரிக்கை
- by David
- Sep 24,2024