2025ல் புது மைல்கல்லை தொட்டது கோவை விமான நிலையம்!
- by David
- Jan 11,2025
Coimbatore
கோவை சர்வதேச விமான நிலையத்தை நேற்று ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான உள்நாட்டு பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இது விமான நிலைய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் கோவை வந்தோர் 5,042, கோவையில் இருந்து பிற முக்கிய இந்திய நகரங்களுக்கு சென்ற பயணிகள் 5092. இத்துடன் 1000க்கும் அதிகமான சர்வதேச பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
2025ல் இது கோவை விமான நிலையத்துக்கு ஒரு புது மைல்கல் என பார்க்கப்படும் நிலையில், கோவை விமான நிலைய உள்நாட்டு பயணிகள் வரலாற்றில் 10000க்கும் அதிகமான பயணிகள் நிலையத்தை ஒரே நாளில் பயன்படுத்துவது இதுவே முதன்முறை என பார்க்கப்படுகிறது.
PC : Kishore Chandran /X