கோவை மாவட்டம் அருகே உள்ள வனப் பகுதியில் இருந்து அவ்வபோது வனவிலங்குகள் உணவு தேடி மாவட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்குள் நுழைகின்றன. 

 

இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இதனால் சில தருணங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று கோவை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளுக்குள் உணவு தேடி ஆக்ரோசமாக சுற்றித் வருகிறது. அதனை விரட்டிய அப்பகுதி பொது மக்களை அந்த குரங்கு தாக்கியிருப்பதாக தகவல் உள்ளது. குரங்கு இவ்வாறு சேட்டை செய்வதை பற்றி வனத்துறையினருக்குதகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள் குரங்கு வேறு பகுதிக்கு சென்று விடுகின்றது. 

 

அதன் பின்னர் மீண்டும் வந்து சேட்டையை தொடர்கிறது என மக்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில் மதுக்கரை மெகா சிட்டி பகுதியில் நுழைந்த குரங்கு ஒன்று வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த காருக்கு மேல் அமர்ந்து கொண்டது. அதனை அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் அதனை விரட்ட முயன்றார். ஆத்திரமடைந்த அந்த குரங்கு ஆக்ரோஷமாக அவரைத் தாக்க இரும்பு கேட்டின் மீது பாய்கிறது. அதனை தனது செல்போனில் பதிவு செய்த அந்த பெண். அந்தக் குரங்கு இதேபோன்று அப்பகுதியில் விரட்ட முயன்ற பொதுமக்களையும் தாக்கி வருவதாகவும், குரங்கு பார்த்து குறைத்த அப்பகுதியில் இருந்த தெரு நாய் தாக்கி சென்றதாக உள்ளதாக புகைப்படமும் வீடியோவும் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மேலும் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அந்த குரங்கை வனத்துறை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது