கண்களைக் கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி  கோவையை சேர்ந்த  சிறுமி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்


கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்ராஜ்,இசைவாணி தம்பதியரின் 6 வயது மகள் அகல்யா. இவர் நினைவு தெரிந்த நாள் முதலே சிலம்ப கலையில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.


இந்நிலையில் சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு 1நிமிடத்தில் 146முறை சிலம்பத்தை சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. 


இதற்கான சான்றிதழ்களை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் கார்த்திக், நிர்வாக இயக்குனர்மோனிகா ரோஷ்ணி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.