மோடி - டிரம்ப் நாளை சந்திப்பு! இதை கவனிச்சீங்களா மக்களே?
- by David
- Feb 12,2025
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவரின் அதிபர் தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக நாளை (13.2.25) சந்திக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் என டிரம்ப் விரும்புவதாக தகவல் உள்ளது. இதற்கு சாதகமாக ஒரு நடவடிக்கையை இந்தியா மிக சமீபத்தில் எடுத்திருந்தது. உதாரணத்திற்கு அதிக திறன் கொண்ட 2 சக்கர வாகனங்கள் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரியை இந்தியா குறைப்பதாக அறிவித்திருந்தது. இது ஹார்லீ டேவிட்சன் போன்ற அமெரிக்க பைக் நிறுவனங்களுக்கு உதவும்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை அமெரிக்க இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதை கவனமாக கையாண்டது இந்தியா. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு உடன் சுமுகமாக சென்று இந்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகர்வுகளை மேற்கொள்ள இந்திய அரசு எண்ணுவதாக கூறப்படுகிறது. அதேபோல இந்தியாவுக்கு அமெரிக்காவின் முதலீடுகள் தேவை.
நேற்று அமெரிக்காவை தலைமையாக கொண்ட கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை மோடி பாரிஸ் நகரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டில் சந்தித்து பேசியிருக்கிறார். இதில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (Generative AI) துறையில் இந்தியாவுடன் இனைந்து முயற்சிகள் எடுத்து இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றத்துக்கு பலம் சேர்ப்பது பற்றி ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
எனவே மோடி - டிரம்பின் சந்திப்பு இரண்டு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.