கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் உக்கடம் புல்லுக்காடு கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி இன்று திறக்கப்பட்டது.

1.06 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் மொத்தம் 72 கடைகள் கொண்ட இந்த அங்காடியில் குளிர்சாதன வசதிகள், கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மார்க்கெட்டில் படகு வடிவில் கடைகள் இடம்பெற்றுள்ளன. இந்த மார்க்கெட்டை தமிழக மின்சார துறை அமைச்சரும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி 13.1.25ல் துவக்கி வைத்தார்.

இந்த மார்க்கெட் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இதை திறக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்ததற்கு சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த மார்க்கெட்டை நம்பி 1500 குடும்பங்கள் இருக்கின்றன. இதை அமைச்சர் உள்வாங்கிக்கொன்டு இந்த மார்க்கெட்டை திறக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறினார். இந்த மார்க்கெட்டில் மக்களுக்கு தரமான மீன்களை வழங்கிட வேண்டும் என வியாபாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், இந்த அங்காடி மிக சிறப்பாக அமைவதற்கு கோவை மாவட்ட மீன் வியபாரிகள் சங்கத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 

இந்த மீன் அங்காடியில் தேவைப்படும் வாகன நிறுத்த வசதி உடன் பேவர் பிளாக் பதித்து தெரு விளக்குகள் அமைக்கப்படும். அத்துடன் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டு இந்த இடம் பாதுகாப்பான இடமாக மாற்றி தரப்படும். இதை முதலமைச்சரின் உத்தரவுடன் செய்து  கொடுக்கப்படும் என உத்திரவாதத்தை அமைச்சர் வியாபாரிகளுக்கு வழங்கினார்.