பரபரப்பான அவிநாசி சாலையில் ஆங்காங்கே யு -டர்ன்கள் அமைக்கப்பட்டுள்ளது. டிராபிக் சிக்னல்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதில் யு -டர்ன் அமைக்கப்பட்டது மக்களிடம் கலவையான கருத்துக்களை பெற்றுள்ளது.

யு -டர்ன் பகுதிகளில் ஒன்-வெயில் வாகனங்கள் செல்வதும், சாலையை கடக்க முயல்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் அவ்வாறு யு -டர்னை பயன்படுத்தி சாலையின் மறுபகுதிக்கு செல்ல சிலர் முயற்சிக்கும் போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நேற்று இவ்வாறு ஒரு வயதான நபர் அவிநாசி சாலை HP பங்க் அருகே உள்ள யு -டர்னை தவறாக பயன்படுத்தியது அவருக்கு மட்டுமல்லாது, அந்த வழியே வந்த பிறருக்கும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியது. 

யு -டர்ன் இருப்பதால் ஒன்- வேயில் சாலையின் மறுபுறத்தை அடையலாம் என பொதுமக்கள் அல்லாது சில "பெரியவர்களுக்கும்" எண்ணுவதால், சாலையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? 

Photos : K.Rohan