கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 2 ஆலயங்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பிப்., 10ம் தேதியும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்.4ம் தேதியும் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது கோவை பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.