கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பாஷா உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை பூமார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் கபர்கஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பதற்கு ஊர்வலமாக செல்ல அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்து அமைப்பை சேர்ந்த சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியிருக்க பாதுகாப்பு கருதி கோவை மாநகர காவல் துறையினர் மற்றும் மத்திய அதிவிரைவு படையினர் என 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதற்காக 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு படை போலிசார் மாநகர காவல்துறையினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
கோவை வந்தடைந்த 200+ மத்திய அதிவிரைவு படை போலீசார்! என்ன காரணம்?
- by CC Web Desk
- Dec 17,2024