கோடநாடு வழக்கு : ஊடகம் என்னை தவறாக சித்தரித்து விட்டது - ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரப்பெருமாள் பேட்டி
- by David
- Mar 11,2025
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை இன்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்தனர்.
இவர் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார் என்று தான் தகவல்கள் வெளிவந்தன. இவருக்கு இந்த வழக்கு தொடர்பாக சம்மன் கொடுத்து இன்று ஆஜராகவேண்டும் என கூறிய நிலையில், இன்று காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் ஆஜரானார். மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்:-
நான் சம்மன் பெற்ற தேதியிலிருந்து என்னை ஊடகத்தில் தவறாக சித்தரித்து உள்ளீர்கள். நான் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்களை தவிர வேற எந்த முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவிலும் பணி செய்யவில்லை. இன்று நடைபெற்ற விசாரணையில், அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில் வழங்கியுள்ளேன். இதற்கு பின்னர் என்னை விசாரணைக்கு வரச்சொல்லி எந்த தகவலையும் அதிகாரிகள் கொடுக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.