பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-தமிழ்நாடு விமானப்படை என்சிசி சார்பில் CATC (ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம்) முகாம் 24.12.2024 துவங்கி 02.01.2025 வரை நடைபெற்றது . கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு விமான மாதிரி வடிவமைத்தல் (Aero modelling) , 0.22 துப்பாக்கி சுடுதல் பயிற்சி (.22 rifle firing), அணிவகுப்பு (Drill) ஆகிய பயிற்சிகள் மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு, சிறுதுளி அமைப்பு மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் 01.01.2025 அன்று டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் உயர்திரு. சந்திரசேகரன் அவர்கள் கலந்துகொண்டு என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.
இந்த முகாமை 2- தமிழ்நாடு விமானப்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் தலைமை வகித்தார். கல்லூரியின் என்சிசி அதிகாரி ஃலையிங் ஆபிஸர் S.C. லாவண்யா , பிற பள்ளி கல்லூரி என்சிசி அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகள் சதீஷ், விஷாந்த், கிரண் சசி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கினர்.
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை வருடாந்திர பயிற்சி முகாம்
- by CC Web Desk
- Jan 02,2025