கோயம்புத்தூர் மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள இராமநாதபுரம், காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இங்கு கட்டப்பட்டுவரும் முதல் தளத்தின் கட்டுமானப் பணியினை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதற்கடுத்து இராமநாதபுரம், பாரதி நகர், 6வது வீதியில் பொதுநிதியிலிருந்து ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளின் விவரத்தை அவர் பொரியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவற்றை தரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.