செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டிக்கர் அரசாக இருந்து வருகிறது. எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக வழங்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என விமர்சித்தார்.
இதனால் 2 கட்சி கவுன்சிலர்கள் இடையே கடுமையான விவாதம் மாமன்றத்தில் ஏற்பட்டது. இதன் நடுவே பிரபாகரன் அடுத்த 3 மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.
அவரை மேயர் சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று, பிரபாகரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இதுதொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated on 3.10.2024 by David