கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் தொடர்பான உத்தேச மாஸ்டர் பிளான் தயாராகி உள்ளது. அதில் விரிவாக்கத்தில் வரக்கூடிய வசதிகள் பற்றி சில முக்கிய விவரங்கள் இருந்துள்ளது. இது கோவை விமான பயணிகள், ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் படி, தற்போது உள்ள பயணிகள் முனையத்தின் தென் பகுதியில் ஒரு பெரிய ஒருங்கிணைந்த விமான பயணிகள் முனைய கட்டிடம், ஒரு விமான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப கட்டிடம்,  புது சரக்கு முனையம், புது விமான பயணிகள் முனையத்தை அணுகக்கூடிய வகையில் 60 மீட்டர் அகல அனுகுசாலை என நிறைய வசதிகள் வரவுள்ளது. 

இந்த பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என தெரிய வருகிறது. இவற்றுடன் தற்போது 2990 மீட்டராக உள்ள விமான ஓடுதளம் 3810 மீட்டராக நீட்டிக்க பட உள்ளது.

இந்த விரிவாகதின் ஒரு பகுதியாக பயணிகள் பலன் பெறும் படி பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்தம், உணவகங்கள், உணவை அமர்ந்து சாப்பிட புட் கோர்ட், பேருந்து நிலைய வசதி என நிறைய அம்சங்கள் இடம்பெற உள்ளது. 

தற்போது இந்த மாஸ்டர் பிளானில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இறுதி ஆகும் மாஸ்டர் பிளானில் மாற்றங்கள் இருந்தாலும் பயணிகள் முனையம், ஓடுதளம் போன்ற திட்டங்கள் அப்படியே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.