அடுத்த வாரம் செவ்வாய் - ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை துவங்குகிறது. அன்று முதல் 19ம் தேதி வரை கோவை மருதமலையில் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் முக்கிய அறிவிப்பு ஒன்று கோயில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட நாட்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இரண்டு சக்கர வாகனங்கள், மலைப்படிகள், கோயில் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PC: The Hindu