கோவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு ஒரு தம்பதி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த விசாரணையின் இறுதியில் விவாகரத்தாக உள்ள பெண்ணுக்கு அவரின் கணவர் ரூ. 2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் நீதிமன்றத்திற்கு அந்த நபர் தனது காரில் கொண்டு வந்திருந்த காசு மூட்டைகளை எடுத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். 

ஆனால் அதை நோட்டுகளாக கொண்டுவராமல், அந்த பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்ட ஜீவனாம்ச தொகையில் ரூ.80,000 ஆயிரத்தை அவர் ரூ.1, ரூ.2 மற்றும் ரூ.5 என நாணயங்களாக மாற்றி அவற்றை 20 மூட்டைகளாக கட்டி நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அந்த பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து, அந்த நபரிடம் நீதிபதி இந்த நாணயங்களை ரூபாய் நோட்டுகளாக மாற்றி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இப்படி ஒரு சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் அனைவரின் கவனத்தை பெற்றது.