கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சேவைகளை விரைவாக பெறும் வகையில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற சிறப்புமிக்க திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில்செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கியது.

முதலாவதாக கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அன்று ஒரே நாளில் 71 மனுக்கள் மீது உடனடி தீர்வு வழங்கப்பட்டது. 

'மக்களைத் தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கோவை மாநகராட்சியில் உள்ள  மண்டலம் வாரியாக நடைபெறும். இதனால் சம்மந்தப்பட்ட மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருந்து மக்களிடம் மனுக்களை பெறமுடியும். விண்ணப்பங்களை வழங்க வரும்போது உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால், அதேநாளில் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதன் அடுத்த கூட்டம் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வரும் வியாழன் (10.10.2024) அன்று வடவள்ளியில் உள்ள அருள்மிகு சக்தி காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.