கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி அவிநாசி சாலை மற்றும் கோவை சத்தி சாலை பகுதிகளில் நடைபெறவுள்ளது.

 

இந்த திட்டப்பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெடுக்கின்றது. இதற்கான நிலத்திட்ட ஆய்வு பணிகளை கோவை மாநகராட்சி செய்து வருகிறது. 

 

இந்த ஆய்வு பணிகளில் இந்த 2 வழித்தடங்களில் நிலத்திற்குள் எங்கெல்லாம் மின் வயர்கள், தொலைதொடர்பு வயர்கள், பாதாள சாக்கடை அமைப்புகள், கேஸ் குழாய்கள் உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. 

 

உக்கடம் பேருந்து நிலையம் முதல் கோவை விமான நிலையம் வழியே நீலம்பூர் வரை 20.4 கிமீ.க்கும், கோவை ரயில் நிலையம் துவக்கி வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கிமீ.க்கு ஆய்வு நடைபெற்று வருகிறது.

 

சத்தி சாலையில் இந்த பணிகள் டெக்ஸ்ட்டூல் பாலம் முதல் சூர்யா மருத்துவமனை பகுதி வரை முழுதும் நிறைவேறி உள்ளது. மொத்தமாக தற்போது கோவை சத்தி சாலையில் நில திட்ட ஆய்வு பணிகள் 75% நிறைவுப்பெற்றுள்ளது.

 

நிலதிட்ட ஆய்வு பணிகள் முழுவதும் நிறைவேறிய பின்னர், இந்த குழாய்கள், வயர்கள், அமைப்புகளை மாற்றியமைக்க எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு, அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் மாநகராட்சி சமர்ப்பிக்கும் என தெரியவருகிறது.