மாநகரில் இப்போதே சாலை விபத்துகளால் இத்தனை பேர் உயிரிழப்பா! வேகம் வேண்டாம் கோவை மக்களே...
- by David
- Mar 18,2025
கோவை மாநகரில் ஒரு பக்கம் விபத்துக்களை குறைக்க மாநகர போலீசார், நெடுஞ்சாலை மற்றும் இதர அரசு துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், மற்றொரு பக்கம் சாலை விதிகளை மதிக்காமல் பறக்கும் வாகன ஓட்டிகள் அதிகரித்து வருவதால் மாநகரில் இப்போதே 200க்கும் அதிகமான சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 1 முதல் மார்ச் 15ம் தேதி வரை கோவை மாநகரில் 200க்கும் அதிகமான வாகன விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. இந்த 2.5 மாத காலத்தில் நடைபெற்ற 249 விபத்துக்களில் 55 விபத்துக்கள் மிகவும் ஆபத்தான விபத்துகளாக இருந்துள்ளது. இதனால் இப்போது வரை 56 பேர் உயிரிழந்துள்ளனர், 223 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
குடித்துவிட்டு வாகனம் இயக்குதல், ஹெல்ட்மேட் அணியாமல் மிக வேகமாக வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், செல் போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குதல் போன்ற காரணங்களால் விபத்துக்கள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவ்வாறு தவறாக வாகனத்தை இயக்கும் நபர்களால் பாதசாரிகளும் பாதிப்படைகின்றனர்.