கோவை, மாவட்ட கனிம வளத்துறை, உதவி அலுவலர் சந்தியா அந்தோணி மேரி மற்றும் அதிகாரிகள் நேற்று அவிநாசி ரோடு பகுதியில் கனிம வளம் கடத்தப்படுவதாக வந்த தகவலை எடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு உள்ள தங்க நகை கடன் அலுவலகம்அருகில் அதிகாரிகள் நின்றிருந்த போது டிப்பர் லாரி வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அதில் அனுமதி இல்லாமல் கிராவல் மணல் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மணலுடன் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சந்தியா அந்தோணி மேரி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் கிராவல் மண்ணை கடத்தி வந்த, சின்ன தடாகம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அஜித் (வயது 30) என்பவரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளர் அருணை போலீசார் தேடி வருகிறார்கள்.