கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.30 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
இதில், ஏற்கனவே சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் மற்றும் இரண்டாம் தவணை கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்திய வியாபாரிகள் என அனைவரும் தங்களது சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் அறிவிப்பு!
- by CC Web Desk
- Sep 05,2024