கோவையில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை
- by CC Web Desk
- Mar 01,2025
Coimbatore
கோவை ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் வெண்ணிலை என்பவற்றின் தோட்டத்தில் இருந்த ஆடுகளை நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சிறுத்தைப்புலி தாக்கியுள்ளது. தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 4 ஆடுகளை கொன்று 1 ஆட்டை கவ்வி சென்றுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை வந்ததை உறுதிப்படுத்திய வனத்துறையினர் அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.