கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறை மைதானத்தில் மாநகராட்சி சார்பில் 165 ஏக்கர் நிலத்தில் செம்மொழி பூங்கா பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 2 கட்டங்களாக நடைபெறும் இந்த திட்டப்பணியில் முதல் கட்டம் - 45 ஏக்கர், இரண்டாம் கட்டம் - 120 ஏக்கர் என பிரிக்கப்பட்டு முதல் கட்டத்தில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது.மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300+ கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.45 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்காவின் முதல்கட்ட பணிகளை 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை குறித்த காலத்தில் முடித்திட வேண்டும் என்ற நோக்கில் பணிகள் துரிதமாக கவனத்துடன் நடைபெற்று வருகிறது.உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு அதில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின்னர் இன்டீரியர் பணிகள் மற்றும் எலக்ட்ரிகல் பணிகள் நடைபெறும். பார்கிங் வளாகம் கட்டுவது சுமார் 80% நிறைவடைந்து உள்ளது.

பூங்கா பகுதியில், செடிகள் நடும் பணி துவக்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் கட்டுமான பணிகள் - நுழைவு சீட்டு வழங்கும் அலுவலகம், கடைகள், உணவக வளாகம், நடைபாதை, சுற்றுச்சுவர், கழிவறைகள்- 60-70% முடிந்துள்ளது.

பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏப்ரல் - மே மாதத்தில் முழு பணிகளும் நிறைவு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் செம்மொழி பூங்காவை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.