மருதமலை கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகளை நேரில் ஆய்வுசெய்த அமைச்சர்! பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
- by David
- Apr 03,2025
Coimbatore
நாளை மருதமலை முருகர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கோவில் அறங்காவலர் குழுவினரும் செய்துள்ளனர்.
அதிகப்படியான மக்கள் நாளை இந்த சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் இங்கு கோவை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் 1,500 காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மருதமலை திருக்கோவில் வளாகம் முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
இன்று மாலை கோவையின் பொறுப்பு அமைச்சரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதை தொடர்ந்து அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்தார்.