டிசம்பர் 1ம் தேதி முதல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ், கோவை மாநகராட்சி மாற்று மாநகர போலீசார் இணைந்து நடத்தும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தின் பிரதான பகுதியில் தொடர்ச்சியாக 4 ஞாயிறுகளில் நடைபெற்றுள்ளது.
இந்த சாலையை காலை 6:30 மணி முதல் 9 மணி வரை வாகனங்கள் இயக்க தடை செய்து, மக்கள் அங்கு வாகனங்கள் இல்லாமல், ஆடி பாட, விளையாட இந்நிகழ்ச்சி வழி செய்கிறது. வழக்கமாக கோவையின் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஆர்.எஸ். புரத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
இதன் இறுதி நிகழ்வு நாளை (29.12.24) அதே ஆர்.எஸ். புரம் பகுதியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகளுடன் நடைபெறுகிறது. இதுவே இந்த ஆண்டின் கடைசி ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
2024ன் கடைசி ஹாப்பி ஸ்ட்ரீட் நாளை கோவையில் !
- by David
- Dec 28,2024