வெளிமாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களில் உள்ள மாநகரங்களுக்கு பணிபுரிய பெண்கள் செல்லும் போது பலரும் தனியார் விடுதிகளில் தங்குவர். பெண்கள் அனைவர்க்கும் தனியார் விடுதி கட்டணங்களை செலுத்துவது சுலபமாக இருக்காது. சிலருக்கு பாதுகாப்பு குறித்தும் ஐயமிருக்கும். 

பெண்கள் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை  'தோழி விடுதிகள்' திறக்கப்பட்டுள்ளது.  

சென்ற ஆண்டு, ரூ.13 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மற்றும் திருச்சியில் மகளிர் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும் ரூ.3.42 கோடி மதிப்பில் சென்னை, அடையாறு, விழுப்புரம், தஞ்சை, சேலம், வேலூர், நெல்லை மற்றும் பெரம்பலூரில் மொத்தமாக 7 விடுதிகள் புதிப்பிக்கப்பட்டு பயன்பட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தனியார் விடுதிகளுக்கு நிகரான அனைத்து வசதிகளும் இந்த தோழி விடுதிகளில் வழங்கப்பட்துள்ளதாகவும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா, பயோமெட்ரிக் முறையில் திறக்கும் கேட்கள் இருப்பதால்பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த விடுதிகளில் தங்க முன்பதிவு செய்ய விரும்புவோர், https://www.tnwwhcl.in/ எனும் இணையத்தளம் மூலம் தங்களுக்கு தேவை படும் அறைகளை புக் செய்யலாம். இதன் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.4000 அதிகபட்சம் ரூ.6,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் போது, தமிழக அரசு கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளீருக்கான 'தோழி விடுதிகள்' திட்டம்  கீழ் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ. 26 கோடி ஓதுக்கி உள்ளது.

இந்நிலையில் இதற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணியை அரசு இன்று மேற்கொண்டுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் உள்ள நிலங்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.