கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் கனமழை பெய்து வந்ததை அடுத்து கடும் வெள்ளப்பெருக்கு அங்கு நிலவியது.

எனவே 26.6.2024 அன்று கோவை குற்றாலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது. 

தற்போது கோவை குற்றாலம் சூழல் ஏற்றதாக உள்ளதால் இன்று 03-09-2024 மீண்டும் திறக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.