வெயிலின் தாக்கம் தற்போது கோவையில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வானம் ஆங்காங்கே மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. வானிலை இப்படித்தான் இருக்கும் என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியிருந்தார். அவ்வாறே வானிலை நிலவரம் இருந்துள்ளது.

இந்நிலையில், வரும் ஞாயிறு மற்றும் திங்கள் (ஜனவரி 19, 20) ஆகிய தேதிகளில் வானிலை எப்படி இருக்குமென அவர் கணித்துள்ளார். இதுபற்றி சந்தோஷ் கூறியுள்ளதாவது: கொங்கு மண்டல பகுதிகளில் வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நாட்களில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படவும் அவ்வப்போது சாரல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என அவர் கண்டித்துள்ளார்.