நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. அவர் இறந்த பிறகு ஏப்ரல் 23, 2017 அன்று கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது.

இந்தச் சம்பவத்தில் எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், ஜம்சேர் அலி, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயகுமார், மனோஜ் சாமி உள்பட 12 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான  சயான் கடந்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.