கோவை கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையம், ஆடை வடிவமைப்பத்துறை தொடக்கவிழா மற்றும் கோயம்புத்தூர் மக்கள் சேவை மையம் இணைந்து ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தினர்.

இந்நிகழ்வில், கல்லூரி மாணவ, மாணவியரின் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 197 மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். கோயம்புத்தூர் Dream Zone Fashion School பயிற்றுநர்கள் நடுவராக இருந்து தேவதர்ஷன், ஷெர்லின்  வெற்றியாளர்களாகத் தேர்வு செய்தனர்.

மகளிர் மேம்பாட்டு மையம் உதவிப்பேராசிரியைகள் ஒருங்கிணைத்த இந்நிகழ்விற்கு கல்லூரியின் தலைவர் கே.பி.ராமசாமி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் P. கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை பள்ளி இயக்குனர் P. அல்லி ராணி கலந்து கொண்டார்.  

இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்துத்துறை மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.