கோவை மாநகர ஊர்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்காவல்படை தேர்வு விரைவில் நடத்தப்படவுள்ளது.

ஆகவே ஊர்காவல் படையில் சேர்ந்து காலல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள கோவை மாநகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வருகின்ற 14.10.2024 முதல் கோவை காந்திபுரம் சி-1.காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

வடவள்ளி கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க என்ன தகுதிகள் இருக்க வேண்டும்?

கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள். வயது வரம்பு - 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் -10.11.2024; விண்ணப்பம் வழங்கும் இடம் - கோவை மாநகர் ஊர்காவல் படை அலுவலகம், : கோவை காந்திபுரம் சி1 காட்டூர் காவல் நிலையம். மேலும் தொடர்புக்கு - 94981-71293 ; 99423-46806; 94981 72525.