கோவையில் 3 ஆண்டுகளுக்கு பின்னதாக இம்மாதம் 27ம் தேதி எல்&டி பைபாஸ் செட்டிபாளையம் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில், தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் கோவை மாவட்ட தலைவரும் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன், தமிழர் பண்பாட்டு ஜல்லிகட்டு பேரவை செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் பங்கேற்றனர்.

கோவையில் ஏப்ரல் 27ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் இது பற்றிய பல தகவல்களை 2 நாட்களுக்கு முன்பாகவே நமது செய்தி தளத்தில் செய்தி வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.