கோவை விளாங்குறிச்சியில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவை விளாங்குறிச்சியில் தமிழக பொதுப்பணி துறை சார்பில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு நிகழ்வில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக தகவல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணி துறை அமைச்சர் வேலு, நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு, தொழில்துறை அமைச்சர் பாலு, செய்தி துறை துறை அமைச்சர் ஸ்வாமிநாதன் கலந்துகொண்டனர்.
அவர்கள் முன்னிலையில் முதலமைச்சர் ரூ. 158.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த வளாகத்தை பல்வேறு IT நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன. அவ்வாறு குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒப்பந்த ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்த IT பூங்கா மூலம் 3500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் எல்காட்டின் புது IT பூங்காவை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!
- by David
- Nov 05,2024