ஈஷாவில் பிப்.26 மஹாசிவராத்திரி: உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்கின்றனர்
- by David
- Feb 22,2025
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் என இன்று ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (22/02/2025) கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுவாமி பாரகா அவர்கள் பேசுகையில்,"ஈஷாவில் 31-ஆவது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இவ்விழா ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது. சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன,"என தெரிவித்தார்.
(கூடுதல் தகவல் விரைவில்)